ஆன்மிகம்
திருவையாறு காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி

திருவையாறு காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி

Published On 2021-02-12 08:34 GMT   |   Update On 2021-02-12 08:34 GMT
ஐயாறப்பர் கோவிலிருந்து சாமி புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்று புஷ்யமண்டப படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவையாறு காவிரி ஆற்று புஷ்யமண்டப படித்துறையில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் அதிகமாகி உள்ள காரணத்தினால் பொதுமக்களின் நலன் கருதி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் திதி கொடுக்க மற்றும் புனித நீராட தடைவிதித்தனர்.

நேற்று தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் யாரும் திருவையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் புனித நீராடாமல் இருப்பதற்கு போலீஸ் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் திருவையாறு கடைவீதியில் மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது.

மேலும் புஷ்யமண்டப படித்துறையில் குளிப்பதற்கும், திதி கொடுப்பதற்கும் அனுமதியில்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் ஐயாறப்பர் கோவிலிருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
Tags:    

Similar News