தொழில்நுட்பச் செய்திகள்
ஏடிஎம்

டெபிட், கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்

Published On 2022-04-09 07:14 GMT   |   Update On 2022-04-09 07:14 GMT
இதன்மூலம் டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகளும், முறைக்கேடுகளும் குறையும் என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமல் யு.பி.ஐ சேவை மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும், ஒவ்வொரு வங்கியையும் தொடர்புகொண்டு இந்த வழிமுறை தொடர்பாக பேசவுள்ளாகவும் கூறியுள்ளது.

இந்த புதிய சேவை வருவதன் மூலம் மக்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோல டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகளும், முறைக்கேடுகளும் குறையும் என கூறியுள்ளது.

யூபிஐ மூலம் பணம் எடுக்க நாம் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருந்தாலே போதும் என கூறியுள்ளது.

இந்த வசதி எப்படி வேலை செய்யும் என்பதையும் ஆர்பிஐ விளக்கியுள்ளது.

இதன்படி நாம் ஏடிஎம்மிற்கு சென்று கார்ட்லெஸ் பணம் எடுக்கும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே ஏடிஎம் ஸ்கிரீனில் க்யூ.ஆர் கோட் வரும், அவற்றை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து, வேண்டிய தொகையை நிரப்பி, யுபிஐ பின் டைப் செய்தால் உடனே ஏடிஎம்மில் இருந்து பணம் வந்துவிடும் என கூறியுள்ளது.

கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் அம்சம் ஏற்கனவே ஐசிஐசிஐ, எஸ்பிஐ உளிட்ட வங்கி ஏடிஎம்களில் வந்தாலும், இந்த யூபிஐ வசதி மூலம் பணம் எடுப்பது இந்தியா முழுவதும் பரவலாக்குகிறது.
Tags:    

Similar News