செய்திகள்
ஓம் பிர்லா

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா

Published On 2020-09-25 12:57 GMT   |   Update On 2020-09-25 12:57 GMT
புதிய கட்டிட வேலை 21 மாதங்களில் முடிவடைந்தால், 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, மக்களவை கூட்டம் அதில் நடத்தப்படும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது.

மத்திய அரசின் பொதுப்பணித்துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவாக டெண்டர் கேட்பு மனு தாக்கல் செய்த டாடா நிறுவனத்துக்கு நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டிடம் கட்டுவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில் ‘‘நாடாளுமன்ற புதிய கட்டிட வேலை 21 மாதங்களில் முடிவடையும், சரியான நேரத்தில் கட்டிட வேலை முடிவடைந்தால், நாம் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது, நம்முடைய மக்களவை கூட்டம் அதில் நடைபெறும்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொடர் நடத்தப்பட்டது மிகவும் சாவலான ஒன்று. ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் வலுவானது. மக்கள் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்களவையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, அரசியல் கட்சிகள், அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலமும் 175 சதவீத உற்பத்தித்திறன் பெற்றது வரலாற்று சிறப்பு மிக்கது’’ என்றார்.
Tags:    

Similar News