உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்.

தருமபுரி வன மண்டலத்தில் யானைகள் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு

Published On 2022-04-17 06:44 GMT   |   Update On 2022-04-17 06:44 GMT
தருமபுரி வன மண்டலத் தில் யானைகளின் எண் ணிக்கை தற்போது 600ஆக அதிகரித்துள்ளது.
தருமபுரி,

தமிழகத்தில் ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவை வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும். இதேபோல் தருமபுரி வனமண்டலத்திலும் யானைகள் அதிகளவில் வசிக்கின்றன.

கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒன்றாக இணைக்கும் பகுதியாக தருமபுரி மண்டல வனப்பகுதி உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை இணைக் கும் ஒருங்கிணைந்த வனப் பகுதியாக தர்மபுரி மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை மட்டுமின்றி மான், சிறுத்தை, காட்டெருது உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னா கரம், பாலக்காடு, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக் கோட்டை, ராயக்கோட்டை, ஜவனகிரி, அஞ் செட்டி மற்றும் உரிகம் ஆகிய வனச் சரக பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும். யானைகள் வசிக்கும் வனப்பகுதியில் 100&க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. ரெயில்பாதை, தேசிய நெடுஞ்சாலையும் வனப்பகுதி வழியே செல்கின்றன. காவிரி, சின்னாறு கரையோரங்களில் உள்ள பசுமைக்காடுகள் யானை களுக்கு பிடித்த வசிப்பி டங்களாக உள்ளன.

யானைகளை பாது காக்க தருமபுரி வன மண்டலத்தில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளப் படுகிறது. வனப்பகுதியினர் யானைகளின் கோடை காலத்தையொட்டி தண்ணீர் தாகத்தை தணிக்க சோலார் மின் வசதியுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

ஒகேனக்கல் வனப்பகுதி யில் 2 இடங்களில் ஆழ் துளை கிணறு அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பப் படுகிறது. தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படும் கோடைகாலங் களில் வனவிலங்குகளுக்காக செயற்கையாக தண்ணீர் தொட்டி அமைத்து,  வாரத் தில் ஒருநாள் டிராக்டர் அல்லது டேக்கர் லாரியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
Tags:    

Similar News