ஆன்மிகம்
மால்வாய் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா

மால்வாய் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா

Published On 2021-03-24 04:10 GMT   |   Update On 2021-03-24 04:10 GMT
அங்காளபரமேஸ்வரி, பெரியாண்டவர், பேச்சியம்மன் சுவாமிகள் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வீதி உலாவும் நடைபெற்றது. கிராம மக்கள் அவரவர் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி, பெரியாண்டவர், பேச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 11-ந்தேதி காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 19-ந் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. விழாவில் குழந்தை இல்லாதவர்கள், பேய் பிடித்தவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டனர்.

மயானத்தில் இறந்தவரின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலில் மருளாளி அமர்ந்து, அமர்ந்து ஆட்டுக்கிடா ரத்தம் குடித்து மருளாளியும், அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி சிறப்பு தரிசனம் செய்தார். அடுத்தடுத்த நாட்களில் இரவு 10.30 மணி அளவில் மருளாளி புது முறத்தில் பிள்ளை பாவை ஏந்தி வந்தார். அங்காளபரமேஸ்வரி, பெரியாண்டவர், பேச்சியம்மன் சுவாமிகள் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வீதி உலாவும் நடைபெற்றது. கிராம மக்கள் அவரவர் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News