ஆன்மிகம்
மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே...

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே...

Published On 2021-01-13 08:51 GMT   |   Update On 2021-01-13 08:51 GMT
பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது.
ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நாம் கதிரவனுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். முன்பெல்லாம் மக்கள் மண்பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல்நலம் சீராக இருப்பதற்கு மண்பானை சமையல் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற இயற்கையைக் கொண்டாடி வழிபட்டால் இனிய வாழ்வு அமையும் என்பதே இதன் தத்துவம்.

பொங்கல் வைக்கும் புதுப்பானையில் 2 நாட்கள் அரிசி களைந்த நீரை ஊற்றி வைத்து பொங்கல் அன்று சுத்தம் செய்து விட்டு பொங்கல் வைத்தால் மண் வாசனை இருக்காது. பானையிலும் விரிசல் விழாது.

வெல்லப் பொங்கல், கல்கண்டு பொங்கல் செய்வதாக இருந்தால் அரிசியை வெறும் வாணலிலில் வறுத்து பிறகு செய்யவும். சர்க்கரை பொங்கல் செய்யும் போது வெல்லத்தை பாகாக காய்ச்சி பொங்கலில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

கல்கண்டு பொங்கல் செய்யும் போது கல்கண்டை நசுக்கி கம்பி பதத்தில் காய்ச்சி வெந்த சாதத்தில் சேர்த்து செய்தால் பொங்கல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

கரும்பு சாறை கொதிக்கவிட்டு வடிகட்டி அதை பொங்கலில் சேர்த்தால் கரும்பு சாறு பொங்கல் தயாராகிவிடும். வெல்லம் சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு பால் சேர்க்க வேண்டும்.
Tags:    

Similar News