செய்திகள்
கோப்புபடம்

கணக்கம்பாளையம் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை

Published On 2021-07-31 08:11 GMT   |   Update On 2021-07-31 08:11 GMT
பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப பள்ளியில் இட வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
உடுமலை:

உடுமலை கல்வி மாவட்டம் கணக்கம்பாளையத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர் சேர்க்கை நடந்தது. அவ்வகையில் வழக்கமாக  ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளியில் 300க்கும் குறைவாகவே மாணவர்கள் எண்ணிக்கை காணப்படும். ஆனால்  நடப்பு கல்வியாண்டுமாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

கடந்த கல்வியாண்டு 270 மாணவர்கள் இருந்தனர். தற்போது  415 மாணவ, மாணவிகள்  பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதிலும்  3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளில்  60 சதவீத அளவில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இனிவரும் நாட்களில் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப பள்ளியில் இட வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே  கூடுதல் கட்டிடம் எழுப்ப துறை ரீதியாக கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து நகராட்சி கமிஷனர் தலைமையிலான பொறியாளர் குழுவினர்  பள்ளியில் ஆய்வு நடத்தினர். அவ்வகையில் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்து கூடுதல் வகுப்பறை கட்ட உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வகுப்பறைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News