உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

24 மணி நேர தடுப்பூசி மையத்தில் இதுவரை 79 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி

Published On 2022-04-16 06:37 GMT   |   Update On 2022-04-16 06:37 GMT
தொடக்கத்தில் ஆர்வம் குறைந்திருந்தாலும், மூன்றாவது அலை, ஓமைக்ரான் என நடப்பாண்டு கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கியதால் தடுப்பூசி செலுத்த பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
உடுமலை:

அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவை எதிர்கொள்ளும் ‘கோவாக்ஷின்’, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்பட்டது.

தொடக்கத்தில் ஆர்வம் குறைந்திருந்தாலும், மூன்றாவது அலை, ஓமைக்ரான் என நடப்பாண்டு கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கியதால் தடுப்பூசி செலுத்த பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த 7 மாதங்களில் இந்த மையத்தில் 59 ஆயிரத்து 45 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 28 ஆயிரத்து 637 பேரும், இரண்டாவது தவணையை 30 ஆயிரத்து 329 பேரும் செலுத்தியுள்ளனர்.

’கோவாக்ஷின்’ முதல் தவணை தடுப்பூசியை 11 ஆயிரத்து 559 பேர், இரண்டாம் தவணையை 7 ஆயிரத்து 805 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 535 பேர் செலுத்தியுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசியை 520 பேர் செலுத்தியுள்ளனர். இம்மையத்தில் ஏப்ரல் முதல் வாரம் வரை 79 ஆயிரத்து 600 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் 

சுகாதாரத்துறை சார்பில் வாரம்தோறும் நடக்கும் மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டாலும் இம்மையத்தில் தொடர்ந்து கோவிஷீல்டு, கோவாக்ஷின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

24 மணி நேர தடுப்பூசி பிரிவு சிறப்பு டாக்டர்கள் கூறுகையில்,

‘கொரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி தொடர்ந்து செலுத்தி வருகிறோம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது என்றனர்.
Tags:    

Similar News