ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

Published On 2021-11-19 06:10 GMT   |   Update On 2021-11-19 06:10 GMT
கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.
கார்த்திகை திருநாள் இன்று (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பெண்கள் கோலமிட்டு அகல்விளக்குகளை ஏற்றி சாமிக்கு வெல்லம், அவல்பொரி படைத்து வழிபாடு செய்வார்கள். இதேபோல் கோவில்களிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர். மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன. சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர். மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News