ஆன்மிகம்
சிதிலமடைந்த நிலையில் காணப்படும் குறிச்சி காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவில்.

குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-08-12 08:04 GMT   |   Update On 2021-08-12 08:04 GMT
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழா நடைபெறுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

காசியை விட வீசம் அதிகம் எனக்கூறப்படும் இத்தலத்தின் பெருமையை அறிந்த பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இத்தலத்தில் வழிபாடுகள் செய்வதில் இருந்து இத்தலத்தின் பெருமை விளங்கும்.

இக்கோவிலில் தற்சமயம் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுவதாக இப்பகுதியில் உள்ள பக்தர்கள் கூறுகின்றனர். கோவில் முழுமையாக சிதிலமடைந்து காணப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும், கோவில் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் திருப்பணி வேலைகள் செய்து தமிழக அரசு குறிச்சி காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகளையும் ெதாகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார்மற்றும் குறிச்சி கிராம மக்கள், பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Tags:    

Similar News