செய்திகள்
கோப்புபடம்

காங்கேயம் இன காளைகள் ரூ.27 லட்சத்திற்கு விற்பனை

Published On 2021-09-14 06:35 GMT   |   Update On 2021-09-14 06:35 GMT
இந்த வார சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன காளை கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.76 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலக புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. 

இந்த வார சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன காளை கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.76 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.36 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

இதில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News