ஆட்டோமொபைல்
டைகர் 850 ஸ்போர்ட்

சர்வதேச சந்தையில் டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் அறிமுகம்

Published On 2020-11-18 08:50 GMT   |   Update On 2020-11-18 08:50 GMT
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.


டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்து இருக்கிறது. 

புதிய மாடல் ரோட்-ஒரியன்டெட் அட்வென்ச்சர் டூரர் ஆகும். இது சமீபத்தில் அறிமுகமான டைகர் 900 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் டைகர் 900 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புதிய பாடி கிராபிக்ஸ், டூயல் டோன் பெயின்ட்டிங் செய்யப்பட்டு உள்ளது. 



டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் கிராபைட் / டைப்ளோ ரெட் மற்றும் கிராபைட் / கேஸ்பியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஷீல்டு, ப்யூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட் மற்றும் எல்இடி லைட்கள் டைகர் 900 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் 888சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது டைகர் 900 மாடலை விட 10 பிஹெச்பி மற்றும் 5 என்எம் குறைவு ஆகும். 

இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இதனுடன் குவிக் ஷிப்டர் கூடுதல் அக்சஸரீயாக வழங்கப்படலாம். 

Tags:    

Similar News