தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்

Published On 2019-02-23 10:17 GMT   |   Update On 2019-02-23 11:52 GMT
விவோ நிறுவனம் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து இந்தியாவில் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #VivoV15 #Smartphone



விவோ நிறுவனம் தனது வி15 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்நிலையில், விவோ தனது அடுத்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்து தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் தகவல்களில் விவோ வி15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விவோ வி15 ஸ்மார்ட்போனில் பாப்-ரக செல்ஃபி கேமரா, ஃபுல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.



விவோ வி15 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.39 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 24 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. வைடு ஆங்கிள் சென்சார்
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- கைரேகை சென்சார்

விவோ வி15 இந்திய விலை:

விவோ நிறுவனம் தனது வி15 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.22,000 முதல் ரூ.25,000 விலையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ அறிமுகம் செய்த வி15 ப்ரோ மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News