செய்திகள்
குல்பூஷண் ஜாதவ்

குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்

Published On 2020-12-03 02:36 GMT   |   Update On 2020-12-03 02:36 GMT
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் தொடர்பாக இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.
இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவின் முறையீட்டின்பேரில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அத்தர் மினல்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியா இன்னும் வக்கீல் நியமிக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தூதரகம் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாநவாஸ் நூன், குல்பூஷண் ஜாதவுக்கு வக்கீல் நியமிப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
Tags:    

Similar News