செய்திகள்
ஜெர்மனி தேர்தல்

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

Published On 2021-09-26 21:54 GMT   |   Update On 2021-09-26 21:54 GMT
ஜெர்மனி நாட்டின் பிரதமராக ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
பெர்லின்:

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக கடந்த 2005-ம் ஆண்டு ஏஞ்சலா மெர்கல் பொறுப்பேற்றார். தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்த அவர், தனது சிறப்பான ஆட்சியால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதன் மூலம் உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

இதற்கிடையே, ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்த ஏஞ்சலா மெர்கல் இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். மேலும், அரசியல் வாழ்வில் இருந்தும் முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ஏஞ்சலா மெர்கலுக்கு பிறகு தங்களை ஆளப்போகும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர். 



யாருக்கு வெற்றி வாய்ப்பு, யாருடைய கூட்டணி ஆட்சியமைக்கும் என எதுவும் தெளிவில்லாத நிலையில் இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளரான ஆர்மீன் லேஷெட்டுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கல். ஆர்மீன் லேஷெட் தவிர கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளரான அனலேனா பேர்பாக், ஜெர்மனியின் தற்போதைய நிதி மந்திரியான ஓலாப் ஷோட்ஸ் ஆகிய இருவரும் சக்திவாய்ந்த வேட்பளராக அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதையும் படியுங்கள்..
கைது
Tags:    

Similar News