தொழில்நுட்பச் செய்திகள்
மத்திய மந்திரி அனுராக் தாகூர்

மத்திய அரசின் சமூக வலைதளங்கள் மீது 600-க்கும் மேற்பட்ட ஹேக்கிங் தாக்குதல்கள்

Published On 2022-04-06 08:27 GMT   |   Update On 2022-04-06 08:27 GMT
இதுபோன்ற ஹேக்கிங் தாக்குதல்களை தடுக்க சைபர் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களில் 600-க்கும் மேற்பட்ட அரசாங்கத்தின் சமூக வலைதள கணக்குகள் ஹேக்கர்களால் முடப்பட்டதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர்,

மத்திய அரசின் ட்விட்டர் கணக்குகள், இமெயில் கணக்குகள் என 641 கணக்குகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In)இந்த அறிக்கையை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு 175 கணக்குகளும், 2018-ல் 114 கணக்குகளும், 2019-ல் 61 கணக்குகளும், 2020-ல்  77 கணக்குகளும், 2021-ல் 186 கணக்குகளும், இந்த வருடம் 28 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஹேக்கிங் தாக்குதல்களை தடுக்க சைபர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News