செய்திகள்
கோப்புபடம்

பக்ரீத் பண்டிகை காரணமாக அன்னூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2021-07-18 08:18 GMT   |   Update On 2021-07-18 08:18 GMT
கோவை மாவட்டம் அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று ஆட்டு சந்தை அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

அன்னூர்:

கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அவினாசி, புஞ்சை புளியம்பட்டி, குன்னத்தூர், சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயி கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் செம்மறி ஆடு, வெள்ளாடு, குறும்பு ஆடுகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தனர். மேலும் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஆடுகள் வாங்கு வதற்காக முஸ்லிம்களும் அதிகளவில் சந்தையில் கூடினர். இதனால் அன்னூர் ஆட்டு சந்தை காலை முதலே களை கட்டியது.

சந்தையில் 8 கிலோ குட்டி ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், 12 கிலோ கிடா ரூ.8 ஆயிரத்திற்கும் விற்பனையானது. அதேபோல் ஆடி மாதம் கிடா வெட்டுபவர்கள் கருப்பு ஆடுகளை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அந்த ஆடுகள் மட்டும் சற்று கூடுதலாக விற்கப்பட்டது.

இதுதவிர நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.450-க்கும், பெருவடை கோழிகள் ரூ.550க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், அன்னூரில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு 2-வது வாரமாக இந்த சந்தை நடைபெற்றது. பக்ரீத் பண்டியை நெருங்கி இருப்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வியாபாரம் நடைபெற்றது.

ஆடுகள் வரத்து அதிகரிப்பு காரணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை போக வேண்டிய ஆடுகள் ரூ.5 ஆயிரத்திற்கும், ரூ.9 ஆயிரத்திற்கு விற்க வேண்டிய ஆடுகள் 1000 குறைந்து ரூ.8 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக அதன்விலை சற்று குறைந்து விற்பனையானது என்றார்.

Tags:    

Similar News