செய்திகள்
கோல மாவில் அண்ணா உருவம் வரையும் அறிவழகி

6 மணி நேரத்தில் 7 கிலோ கோல மாவில் அண்ணா உருவம் வரைந்த மாணவி

Published On 2021-09-15 09:57 GMT   |   Update On 2021-09-15 09:57 GMT
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிவழகி 7 கிலோ கோல மாவை கொண்டு 10 அடியில் அண்ணாவின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. ஓவிய கலையில் பட்டம் பெற்றவர்.

இவர், தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவங்களை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.

ஏற்கனவே, மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம், முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதர் தெரேசா ஆகியோரின் உருவங்களை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

இந்த நிலையில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிவழகி 7 கிலோ கோல மாவை கொண்டு 10 அடியில் அண்ணாவின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

6 மணி நேரத்தில் இதை உருவாக்கியுள்ளார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் அறிவழகிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

Tags:    

Similar News