செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்- உயர் நீதிமன்றம்

Published On 2021-05-17 11:50 GMT   |   Update On 2021-05-17 13:40 GMT
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் பல இடங்களில் ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா மரணங்களை குறைத்து காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியது.



கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் நடத்தப்படவில்லை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

இதையடுத்து, கொரோனா மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் குறைத்து காட்டப்படுகிறதா? என அறிக்கை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
Tags:    

Similar News