செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Published On 2019-10-19 06:51 GMT   |   Update On 2019-10-19 06:51 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த வழக்கில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் தேனி ஜே.எம். கோர்ட்டில் 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாணியம்பாடியை சேர்ந்த முகமதுசபி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது கடந்த 16-ந் தேதி விசாரணை நடந்தது. அதனை 19-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்தி வைத்தார். இதனிடையே ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரது மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது.

அவர்களது சார்பில் வக்கீல் விஜயகுமார், மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா விடுவிக்கப்பட்டார். அதனை மேற்கோள்காட்டி மாணவர்கள் என்பதால் அவர்களது எதிர்காலம் கருதி பிரவீன், ராகுல் ஆகியோருக்காவது ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 21-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News