ஆன்மிகம்
திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2021-09-14 06:32 GMT   |   Update On 2021-09-14 06:32 GMT
அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக திருப்பைஞ்சீலி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கொள்ளிடத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது வனத்தாயி அம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மன் கொலுவில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் 13-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக திருப்பைஞ்சீலி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கொள்ளிடத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

மாலையில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மாவிளக்கு போட்டு பக்தர்கள் வணங்கினர். அதைத்தொடர்ந்து ஆதாளி சாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Tags:    

Similar News