உள்ளூர் செய்திகள்
பொங்கல் கொண்டாடிய போலீசார்

கோவையில் போலீஸ் நிலையத்தில் மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து பொங்கல் கொண்டாடிய போலீசார்

Published On 2022-01-15 09:21 GMT   |   Update On 2022-01-15 09:21 GMT
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோவை:

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகரீ கம் வளர்ந்த பிறகு பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடுவது  என்பது குறைந்து வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் குக்கரில் பொங்கல் வைத்து வழிபடுவது போன்ற நிலை மாறிவிட்டது. 

இந்தநிலையில் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள ஆயுதப் படை அலுவலகம் முன்பு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்து ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந் தார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதேபோல அன்னூர் போலீசார் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடி அசத் தினர். அன்னூர் போலீஸ் நிலையத்தில் மேட்டுப் பாளையம் டி.எஸ்.பி. பாலமுருகன், இன்ஸ் பெக்டர் நித்தியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என அனை வரும் புதிய வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் சேலை என ஒரே நிறத்தில் போலீசாரும் அவரது குடும்பத்தினரும் புத்தாடைகளை அணிந்தும் பொங்கல் விழா கொண்டாடினர். 

மேலும் போலீஸ் நிலைய வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, பொங்கல் விழாவிற்கு போலீசார் தங்களது குடும்பத்தினரை நாட்டு மாடு பூட்டிய வண்டியில் அழைத்து வந்து பொங்கலை கொண்டாடினர். மாட்டு  வண்டியில் ஒவ்வொரு போலீசாரின் குடும்பமும் தனித்தனியாக வந்து இறங்கி ஒன்றாக கூடி பொங்கல் கொண்டாடினர். 

இதில் விவசாயிகளையும், மாடுகளையும் வாழ்த்தி வழிபட்டனர். இதையடுத்து வளாகத்தில் உள்ள சக்தி விநாயகரை வழிபட்டு வைத்த பொங்கலை அனைவருக்கும் வழங்கினர். பின்னர் போலீசார்  நாட்டு மாடு பூட்டப்பட்ட மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். மேலும் மாடுகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கியும் வழிபட்டனர். அனைவரும் மாடுகளுடன் குடும்பம் குடும்பமாக வந்து செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் போலீசார்  அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Tags:    

Similar News