ஆன்மிகம்
சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா

சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா

Published On 2021-08-13 03:07 GMT   |   Update On 2021-08-13 03:07 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில், நாக சதுர்த்தியையொட்டி 13-ம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில், நாக சதுர்த்தியையொட்டி 13-ம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்கை பூஜை, கணபதி பூஜை, புன்யாஹ வாசனம், நவக்கிரக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, பூர்ண கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நாகம்மாதேவி நாம ஹோமம், காயத்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. காலை 8 மணிக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று நாகம்மா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

பால்குட ஊர்வலத்தில், காவடியாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பெண்கள் அம்மன் வேடம் அணிந்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், வாண வேடிக்கையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஓம்சக்தி பக்தர்கள் மற்றும் சின்னதக்கேப்பள்ளி, பெரிய தக்கேப்பள்ளி, பழையஊர், மாளகுப்பம், கரடிகுறி, கள்ளக்குறி, பூசாரிப்பட்டி, போத்திநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News