செய்திகள்
ரவிசங்கர் பிரசாத் - மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

Published On 2020-10-24 14:50 GMT   |   Update On 2020-10-24 14:50 GMT
காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமத்தித்துவிட்டார் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, மேஜையில் இருந்த ஜம்மு காஷ்மீர் கொடியை காட்டி இது தான் எனது கொடி என்றார். 

இந்த கொடி (ஜம்முகாஷ்மீர் கொடி) மீண்டும் எப்போது வருகிறதோ அப்போது தான் நாங்கள் அந்த கொடியை ஏற்றுவோம் (இந்திய தேசியக்கொடி).. எங்களுக்கு சொந்தமான கொடியை மீண்டும் கொண்டுவரும் வரை நாங்கள் வேறு எந்த கொடியையும் ஏற்றமாட்டோம். 

இந்த கொடிதான் ( ஜம்மு காஷ்மீர் கொடி) அந்த கொடியுடனான (இந்திய தேசிய கொடி) எங்கள் உருவாக்கியது. இந்த கொடி (ஜம்மு காஷ்மீர் கொடி) எப்போது எங்கள் கைகளுக்குள் வருகிறதோ அப்போதுதான் நாங்கள் அந்த கொடியை (இந்திய தேசிய கொடி) ஏற்றுவோம். என்றார்.

மெகபூபா முப்தியின் கருத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மெகபூபா கருத்துக்கு மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

மெகபூபா முப்தி தேசியகொடியை எவ்வாறு அவமதிக்கலாம்? இதை விட ஏற்றுக்கொள்ளமுடியாதது எதுவும் இல்லை. ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கம். 

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் முற்றிலும் அரசியலமைப்பு முறையாகும். முப்தியின் கருத்துக்கு நாங்கள் கண்டம் தெரிவிக்கிறோம். ஆனால், மதச்சார்பின்மையை கூறும் நபர்கள் முப்தியின் தேச விரோத கருத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர்.

என்றார்.
Tags:    

Similar News