ஆன்மிகம்
கவுண்டம்பாளையத்தில் மஹிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கவுண்டம்பாளையத்தில் மஹிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-09-15 03:37 GMT   |   Update On 2020-09-15 03:37 GMT
கவுண்டம்பாளையத்தில் மஹிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் மஹிஷா சூரமர்த்தினி அம்மன் 18 கைகளுடன் அசுரனை வதம் செய்யும் கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் பி.என்.டி. காலனி பகுதியில் மஹிஷா சூரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், அம்மன், நந்தி உள்ளிட்ட சிலைகள் உள்ளன. இந்த கோவில் முன்பு வெற்றிவேல் பதிக்கும் நிகழ்ச்சி பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்று அம்மன் முன் வேல் பதிக்கப்பட்டது.

வேறு எங்கும் இல்லாத வகையில் மஹிஷா சூரமர்த்தினி அம்மன் 18 கைகளுடன் அசுரனை வதம் செய்யும் கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News