ஆன்மிகம்
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது

Published On 2021-09-03 08:32 GMT   |   Update On 2021-09-03 08:32 GMT
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் விநாயக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரம் அருகே வாணி-கமலாம்பிகா சமேத வெள்ளை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

வருகிற 11-ந்தேதி வரை விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா உள் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது.

விழாவில் 6-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 10-ந் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News