செய்திகள்
வெங்காயம்

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 45 ரூபாயாக குறைந்தது

Published On 2020-01-13 05:19 GMT   |   Update On 2020-01-13 05:19 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60 வரை விற்ற வெங்காயம் இன்று ரூ.45-க்கு விற்கப்படுகிறது.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்தது. 1 கிலோ ரூ.180 வரை மொத்த விற்பனையில் விற்கப்பட்டது. சில்லரையில் ரூ.200 வரை விற்று வந்த வெங்காயம் கடந்த மாதம் முதல் படிப்படியாக விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60 வரை விற்ற வெங்காயம் இன்று ரூ.45-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவுக்கு) வருமாறு:-

தக்காளி-ரூ.14
பெங்களூர் தக்காளி-ரூ.20
உருளைக்கிழங்கு-ரூ.25
சி.வெங்காயம்-ரூ.120
கத்திரிக்காய்-ரூ.20
பாகற்காய்-ரூ.25
சுரக்காய்-ரூ.20
வெண்டைக்காய்-ரூ.20
கொத்தவரங்காய்-ரூ.20
பீன்ஸ்-ரூ.30
முள்ளங்கி-ரூ.10
கேரட்-ரூ.50
பீட்ரூட்-ரூ.20
அவரைக்காய்-ரூ.30
சவ்சவ்-ரூ.10
நூக்கல்-ரூ.10
கோவக்காய்-ரூ.20
முட்டை கோஸ்-ரூ.12
வெள்ளரிக்காய்-ரூ.10
முருங்கைக்காய்-ரூ.120
புடலங்காய்-ரூ.10
பச்சை மிளகாய்-ரூ.12
இஞ்சி-ரூ.55
காலிபிளவர் ஒன்று-ரூ.12.

கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரி சுகுமார் கூறுகையில், “கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 300 முதல் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வரும். விளைச்சல் அதிகம் காரணமாக கடந்த 2 நாட்களாக 380 முதல் 400 லாரிகளில் காய்கறிகள் வருகிறது. இதன் காரணமாக விலை குறைந்து உள்ளது” என்றார்.
Tags:    

Similar News