தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஜியோ திட்டம்

Published On 2020-09-25 06:29 GMT   |   Update On 2020-09-25 06:29 GMT
ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சாதனங்களை உற்பத்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் சியோமி போன்ற சீன நிறுவனங்களை எதிர்கொள்ள குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



இதற்கென லாவா இன்டர்நேஷனல், கார்பன் மொபைல்ஸ் மற்றும் டிக்சான் டெக்னாலஜீஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் ஜியோ டேட்டா சலுகைகளுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

ஜியோ ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனமும் லாக்டு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கென ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News