இந்தியா
சந்தியா முகர்ஜி

பத்ம விருதை பெற மறுக்கும் மற்றொரு பிரபலம்

Published On 2022-01-26 08:14 GMT   |   Update On 2022-01-26 08:14 GMT
ஏற்கனவே பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியிருந்தார்.
கொல்கத்தா:

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் தனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்துள்ளார். இது குறித்து அவரது மகள் சவுமி சென் குப்தா கூறியதாவது: - 

90 வயதில் விருது வழங்குவது தன்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி கூறினார். பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது. அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார். 

இந்த விருதை நிராகரிப்பதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெற மறுக்கிறார்.

இவ்வாறு சவுமி சென் குப்தா கூறினார்.

ஏற்கனவே பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிய நிலையில், தற்போது அதே மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பிரபலமும் பத்ம விருதை ஏற்க மறுத்துள்ளார்.
Tags:    

Similar News