ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக்

பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு நிறுத்தம்

Published On 2020-09-14 11:41 GMT   |   Update On 2020-09-14 11:41 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை பஜாஜ் நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

புதிய செட்டாக் மாடலுக்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகள் ஜூன் மாத இறுதியில் துவங்கப்பட்டன. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய 2.5 மாதங்களில் முன்பதிவு மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு நிறுத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.



எனினும், தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பணிகள் முந்தைய திட்டத்தின் படி நிறைவு பெறாமல் இருக்கலாம் என தெரிகிறது. 

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப் மாடலைவிட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைப்பதால், தட்டுப்பாடு சூழலை எதிர்கொள்ளும் அளவு உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News