உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதையும், வியாபாரிகள் ஊர்வலமாக சென்றதையும் படத்தில் காணலாம்.

தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

Published On 2021-12-23 09:39 GMT   |   Update On 2021-12-23 09:39 GMT
சுமார் 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தாராபுரம்:

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி.வரி ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளிக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று ஜவுளி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் தாராபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சாரதாஸ் சண்முகவேல் தலைமையில் வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.  
Tags:    

Similar News