செய்திகள்
மழை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

Published On 2021-06-12 07:06 GMT   |   Update On 2021-06-12 07:06 GMT
மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:

வடக்கு வங்க கடல் அதையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடகடலோர மாவட்டங்களில் பொதுவாக மேக மூட்டத்துடனும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் (13,14-ந்தேதி) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 15-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News