செய்திகள்
மருத்துவ படிப்பு

அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 2.5 சதவீத உள் ஒதுக்கீடு?- இன்று ஆலோசனை

Published On 2021-06-10 09:16 GMT   |   Update On 2021-06-10 09:16 GMT
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைக்கவில்லை என்ற கருத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அதனை அ.தி.மு.க. அரசு அமல்படுத்தியது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் அவர்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைசெயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News