ஆன்மிகம்
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2020-08-29 04:30 GMT   |   Update On 2020-08-29 04:30 GMT
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர்சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
நெல்லிக்குப்பத்தில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி பெருமாள், பூலோகநாதர்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர்சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. அதாவது பெருமாளுக்கும், தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்பாளுக்கும் மங்கள வாத்தியத்துடன் ஒரே சமயத்தில் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News