ஆன்மிகம்
ஆதிவராக நல்லூரில் அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஆதிவராக நல்லூரில் அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-15 06:17 GMT   |   Update On 2020-09-15 06:17 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தில் அகத்திய மாமுனிவருக்கு ஆலயத்தில் உள்ள லோபமுத்ரா சமேத அகத்தியர் சுவாமி மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தில் அகத்திய மாமுனிவருக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜை, சூரிய பூஜை, 2-ம் கால யாக சாலை பூஜை, திரவியாகுதி, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, பூர்ணாகுதி நடந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு லோபமுத்ரா சமேத அகத்தியர் சுவாமி மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆதிவராகநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News