இந்தியா
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-12-04 17:57 GMT   |   Update On 2021-12-04 17:57 GMT
நாட்டில் இதுவரை 127.50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
 
இந்நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த இரண்டு மாதத்துக்குப் பிறகு இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News