ஆன்மிகம்
சுடலைமாடசாமி

தச்சமொழி சுடலைமாடசாமி கோவில் கொடை விழா

Published On 2021-08-18 05:32 GMT   |   Update On 2021-08-18 05:32 GMT
சாத்தான்குளம் தச்சமொழி சுடலை மாடசாமி கோவில் ஆடிக்கொடை விழா 3 நாட்கள் நடந்தது. இதில் பரிவார சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்கார பூஜை, மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.
சாத்தான்குளம் தச்சமொழி சுடலை மாடசாமி கோவில் ஆடிக்கொடை விழா 3 நாட்கள் நடந்தது.

முதல் நாள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மாக்காப்பு, அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, 2-ம் நாள் காலை 10 மணிக்கு சுடலை மாடசாமி உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பொங்கலிடுதல், மதியக்கொடை, பரிவார சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்கார பூஜை, மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.

3-ம் நாள் சாமி உணவெடுத்தல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், விளையாட்டு போட்டி, சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற்றது.
Tags:    

Similar News