தொழில்நுட்பம்
கோப்புப்படம்

விரைவில் மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை செய்யலாம்

Published On 2021-06-24 11:04 GMT   |   Update On 2021-06-24 11:04 GMT
குறைந்த விலையில் கொரோனாவைரஸ் தொற்று உள்ளதா என கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்த ஸ்வாப்களை ஆய்வுகளில் பயன்படுத்தினர். ஆய்வில் பிசிஆர் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டபவர்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களை சோதனை செய்தனர். இரு சோதனைகளிலும் தொற்று உறுதியாகி இருந்தது. 



போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81 முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிகிறது. வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசவுகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது.

இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும். இதனை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் யாரும் தேவையில்லை. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News