தொழில்நுட்பம்
ஆப்பிள் லோகோ

2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்

Published On 2019-08-16 11:21 GMT   |   Update On 2019-08-16 11:21 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோல்டுஃபார்ரிலீஸ் (HoldForRelease) என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா 7 ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் காலெண்டர் செயலியில் தேதி செப்டம்பர் 10, செவ்வாய் கிழமை என குறிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐபோன் XS மற்றும் XR சீரிஸ் அறிமுகமாகும் முன் வெளியான இதேபோன்ற புகைப்படங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் மேம்பட்ட மாடல்கள் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படலாம்.



இந்த ஆண்டு வெளியாகும் மாடல்கள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ என்ற பெயரில் அறிமுமக் செய்யப்படும் என்றும் இவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் இவற்றில் பெரிய பேட்டரிகள், புதிய ஆண்டெனா தொழில்நுட்பம், ஏ13 பிராசஸர், மேம்பட்ட டேப்டிக் என்ஜின் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஐபோன் XR மாடல் ஐபோன் 11ஆர் என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ஐபோன் 11ஆர் மாடலில் டூயல் பிரைமரி கேமரா, 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13, வாட்ச்ஒ.எஸ். 6. டி.வி.ஒ.எஸ். 13 மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்டவற்றையும் வெளியிட இருக்கிறது.

புகைப்படம் நன்றி: ihelpbr
Tags:    

Similar News