தொழில்நுட்பம்

பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்

Published On 2019-03-03 06:42 GMT   |   Update On 2019-03-03 06:42 GMT
விவோ நிறுவனத்தின் வி15 ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகி இருக்கிறது. #VivoV15



விவோ வி15 ஸ்மார்ட்போன் தாய்லாந்து மற்றும் மலேசிய சந்தைகளில் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக விவோ நிறுவனம் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் வி15 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்ட்டில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. 



விவோ வி15 சிறப்பம்சங்கள்:

- 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
- 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 
- 5 எம்.பி. சென்சார், f/2.4
- 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி. 
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

விவோ வி15 ஸ்மார்ட்போனின் விலை தாய்லாந்தில் THB 10,999 (இந்திய மதிப்பில் ரூ.24,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டோபாஸ் புளு மற்றும் கிளாமர் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிரேடியண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் விற்பனை பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. தாய்லாந்தை தொடர்ந்து மலேசியா வலைதளத்திலும் விவோ வி15 ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. எனினும் விற்பனை பற்றி எவ்வித தகவலும். இல்லை. தற்சமயம் வெளிநாடுகளில் அறிமுகமாகி இருக்கும் விவோ வி15 விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News