செய்திகள்
கோப்பு படம்.

தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி

Published On 2021-04-08 16:11 GMT   |   Update On 2021-04-08 16:11 GMT
தஞ்சை நாகையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். டெல்டாவில் ஒரேநாளில் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 103 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 597 ஆக உயர்ந்தது. தற்போது 823 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75வயது ஆண் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 276 பேர் பலியாகி உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 53 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 472ஆக உயர்ந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 496 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் நேற்று 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக உயர்ந்தது. தற்போது 548 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை, நாகையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். டெல்டாவில் ஒரே நாளில் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 210 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Tags:    

Similar News