ஆன்மிகம்
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்

பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்

Published On 2021-09-15 07:04 GMT   |   Update On 2021-09-15 07:04 GMT
பெண்கள் பூத்தட்டு, பொங்கல் பானையுடன் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சாயல்குடியில் சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி, பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந்தேதி காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடு்த்து கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் பொங்கல் விழா தொடங்கியது. 10-ந்தேதி 108 திருவிளக்கு பூஜையை பெண்கள் நடத்தினர். இதையடுத்து நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாயல்குடி பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன்பிறகு சாஸ்தா சுயம்புலிங்க சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் பூத்தட்டு, பொங்கல் பானையுடன் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News