செய்திகள்
ஆர்ப்பாட்டம்

நாகை அருகே சீமானை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-14 13:04 GMT   |   Update On 2021-10-14 13:04 GMT
நாகை அருகே 100 நாள் வேலை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஐவநல்லூர் ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை அருகே ஐவநல்லூர் ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சரபோஜி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நீதிசோழன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இடும்பையன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் செல்லப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கணபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News