செய்திகள்
கொரோனா பரிசோதனை

கேரளாவில் இன்று 6,419 பேருக்கு கொரோனா: 7,066 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2020-11-18 15:48 GMT   |   Update On 2020-11-18 15:48 GMT
கேரளாவில் இன்று 6,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7,066 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அறிவிப்பின்படி 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக இருந்த மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வெகுவாக குறைத்துள்ளது.

அதேசமயம் கேரளா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று கேரளாவில் புதிதாக 6,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 7,066 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை கேரள மாநிலத்தில் 1,943 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 69,394 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இதுவரை 5,37,791 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,68,460 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 67,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 56,21,634 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டள்ளது.

எர்ணாகுளத்தில் 887 பேரும், கோழிக்கோட்டில் 811 பேரும், திருச்சூரில் 703 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News