தொழில்நுட்பம்
ஐபோன் 11 ப்ரோ

வேற லெவல் கேமரா, சக்திவாய்ந்த அம்சங்கள் - அதிரடி காட்டும் ஐபோன் 11 ப்ரோ

Published On 2019-09-11 04:29 GMT   |   Update On 2019-09-11 04:29 GMT
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 11 மாடலுடன் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.



ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போனுடன், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன்களை விட அதிக பிரகாசமானதாகும். 

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அல்ட்ரா வைடு, வைடு மற்றும் டெலிபோட்டோ கேமராக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். 

ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐபோன் XS மாடலை விட நான்கு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இரு மாடல்களிலும் 18 வாட் யு.எஸ்.பி. டைப்-சி பவர் அடாப்டர் வழங்கப்படுகின்றன.



ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் 2436x1125 பிக்சல் / 6.5 இன்ச் 2688x1242 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே
- A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
- 64 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி
- ஐ.ஒ.எஸ். 13
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. வைடு ஆங்கிள், f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ வசதி
- 12 எம்.பி. 120°  அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 12 எம்.பி. டெலிபோட்டோ, f/2.0
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- லித்தியம் அயன் பேட்டரி
- Qi வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்

ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99,900 மற்றும் ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News