செய்திகள்
ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் விவகாரம்: ரியா சக்ரபோர்த்தி மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு

Published On 2020-08-06 15:20 GMT   |   Update On 2020-08-06 15:23 GMT
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி, இந்திரஜித் சக்ரபோர்த்தி, சந்த்யா சக்ரபோர்த்தி, சௌவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிரந்தார், ஸ்ருதி மோடி மற்றும் பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக, சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.

கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டடார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டடார் என தெரிவித்திருந்தார்.

இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். ரியாவிடம் விசாரணை நடத்த பீகார் போலீசார் மும்பை சென்றனர். இன்று அவர்கள் சொந்த மாநிலம் திரும்பினர். ரியா மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

இதற்கிடையில் பீகார் அரசு சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News