ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் நாளை பவித்ரோற்சவ விழா தொடங்குகிறது

Published On 2020-07-29 04:02 GMT   |   Update On 2020-07-29 04:04 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்தாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோவில் உள்பிரகாரத்தில் வீதிஉலா நடக்கிறது.

31-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 1-ந்தேதி பூரண ஆரத்தியும் நடக்கிறது. தோஷ நிவர்த்திக்காக இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுவதாகவும், கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News