லைஃப்ஸ்டைல்
கேக்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்யலாமா?

Published On 2020-12-24 09:30 GMT   |   Update On 2020-12-24 09:33 GMT
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. இந்த கேக்கை கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே ருசியாக செய்து அன்பால் பறிமாறுவதுதான் இதன் சிறப்பு.
தேவையான பொருட்கள்

மைதா - 220 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 220 கிராம்
உலர்ந்த பழங்கள் - தேவையான அளவு
முட்டை - 3
வெண்ணெய் - 220 கிராம்
பாதாம் - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவியது - 1 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்குக் கலக்க வேண்டும்.  

அடுத்ததாக முட்டைகளை உடைத்து அதையும் நன்குக் கலந்துகொள்ள வேண்டும்.

பின் மைதா மாவு அதோடு உப்பு, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் சேடா ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும்.

இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு சீராகக் கலக்க வேண்டும்.

பின் அதை ஒரு வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் பாதாமை தூவவும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் வேக வைக்கலாம். குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூடு பதத்தில் 40 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

பின் திறந்து பார்த்தால் கேக் உப்பி வந்திருக்கும்.

சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயார்.

Tags:    

Similar News