தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ மிக்ஸ் 3

இன் டிஸ்ப்ளே செல்பி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2021-06-21 05:57 GMT   |   Update On 2021-06-21 07:07 GMT
சியோமி நிறுவனத்தின் புது எம்ஐ மிக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான எம்ஐ மிக்ஸ் போல்டு கொண்டு தனது எம்ஐ மிக்ஸ் சீரிசை அப்டேட் செய்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எம்ஐ மிக்ஸ் 4 மூலம் இந்த சீரிசை மீண்டும் மேம்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய எம்ஐ மிக்ஸ் 4 விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இது சியோமி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். முந்தைய எம்ஐ மிக்ஸ் மாடல்களை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.



இத்துடன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது இன் டிஸ்ப்ளே கேமராவுடன் வெளியாகும் சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த மாடலில் குவாட் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீனுக்கு மாற்றாக புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்படும்.

எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 
Tags:    

Similar News