ஆன்மிகம்
ராகு - கேது

சர்ப்ப தோஷம், சந்தோஷமாக மாற கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2020-08-24 04:18 GMT   |   Update On 2020-08-24 04:18 GMT
ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு-கேதுவிற்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்தால் அது ‘கால சர்ப்ப தோஷம்’ ஆகும்.
ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு-கேதுவிற்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்தால் அது ‘கால சர்ப்ப தோஷம்’ ஆகும்.

இப்படிப்பட்ட சர்ப்ப தோஷ ஜாதகம் அமைந்தவர்கள் சந்தோஷம் பெறுவது சிரமம். திருமணத்தடை, பிள்ளைப்பேற்றில் தடை என்று ஒவ்வொரு தடைகளையும் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்டவர்கள் ஜாதகத்தில் ராகு- கேது இருக்கும் இடமறிந்து அதற்குரிய நட்பு கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை-பாக்குடன் நுனி இலையில் வைத்து, மந்தாரை மலருடன் ராகு படத்திற்கு சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.

அதேபோல் விரதம் இருந்து கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்து வித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபடவேண்டும். நாகர் கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளி தோறும் பாடி பூஜித்தால் சர்ப்ப கிரகங்கள் சந்தோஷத்தை வழங்கும். நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவிற்கு நான்கு பிரகாரமும், கேதுவிற்கு ஏழு பிரகாரமும் வர வேண்டும். 
Tags:    

Similar News